உலக செய்திகள் செய்திகள் வினேஷ் போகத் தகுதி நீக்கம்…பிரதமர் மோடி வேதனை…!!! Sathya Deva7 August 20240107 views ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 வது இடத்தில் உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் அபார வெற்றி பெற்றார். பின்பு அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடியிருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மோடி அவர்கள் தனது இணையதள பக்கத்தில் வினேஷ் நீங்கள் சாம்பியன்களின் ஒரு சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் என்றும் கூறியுள்ளார். மேலும் இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகளின் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதேசமயம் நீங்கள் வலுவான மனநிலை கொண்டவர் என்பதை நான் அறிவேன். மேலும் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு வலுவாக திரும்பி வா நாங்கள் அனைவரும் உங்களுக்காக வேரூன்றி நிற்கிறோம் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.