வினேஷ் போகத் நாடு திரும்பினார்…உற்சாக வரவேற்பு செய்த கிராம மக்கள்…!!!

பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் பிரிவில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய நேற்றைய தினம் நாடு திரும்பினார் என கூறப்படுகிறது. இவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு மாலை, மரியாதை மற்றும் பரிசு பொருட்களை பொதுமக்கள் வழங்கி உள்ளனர். மேலும் இவருக்காக 750 கிலோ லட்டு தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தனது உறவினரும் குருவமான மகாவீ ர் சிங்கிடம் ஆசி பெற்று கண்ணீர் விட்டு அழுதார் என்று கூறப்படுகிறது. ஊர் மக்களின் அன்பு குறித்து வினேஷ் போகத் நிகழ்ச்சி அடைந்துள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாதது எனது வாழ்வின் ஒரு வடுவாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அவர் இனியும் நான் மல்யுத்தத்தில் ஈடுபடுவேனா மாட்டேனா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை என்றும் ஆனால் உங்கள் அன்பு கிடைத்ததே எனக்கு பெரிய நம்பிக்கையாக இருக்கிறது என தெரிவித்தார். இந்த நம்பிக்கை கொண்டு சரியான திசையில் பயணிக்க விரும்புகிறேன் என்பதையும் தெரிவித்தார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!