செய்திகள் மாநில செய்திகள் விபத்துக்கான காரணம் இது தான்…. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு….!!! Sathya Deva22 July 20240119 views உத்திரபிரதேச மாநிலத்தில் சண்டிகரிலிருந்து தீப்ரூகர் செல்லும் விரைவு ரயில் மதியம் 2. 35 மணி அளவில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பெட்டிகள் கவிழ்ந்தது. இதனால் 3 பேர் உயிரிழந்தனர் எனவும் 30 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 இலட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2.5 இலட்சமும், சிறுகாயம் அடைந்தவருக்கு 50 ஆயிரமும் இழப்பீடு வழங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விபத்துக்கான காரணங்களை குறித்து அதிகாரிகள் தன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையில் ரயில் தண்டவாளங்கள் முறையாக பராமரிக்கப்படாதது தான் விபத்து ஏற்பட முக்கிய காரணம் என்று குறிப்பிட்டப்படுகிறது. தண்டவாளத்தின் ரயில் பாதைகள் சரியாக கட்டப்படவில்லை என்றும் ரயில் வரும்போது அவை சீராக இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.