சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமல் நடிக்கும் “சார்” படத்தின் கவனம் ஈர்க்கும் டிரைலர் ரிலீஸ்…இணையத்தில் வைரல்…!!! Sowmiya Balu20 September 2024077 views சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் போஸ் வெங்கட். இவர் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சார்”. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கிராஸ் ரோட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் ரிலீசான நிலையில் படத்தின் தலைப்பை தவிர்க்க முடியாத காரணத்தினால் சார் என மாற்றியுள்ளனர். இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.