விமான சேவைகள் சீரடைந்து வருகிறது… மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்….!!

நாடு முழுவதும் விமான சேவைகள் நேற்று பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது.இது தற்போது படிப்படியாக சீரடைந்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் நேற்றைய தடையால் ஏற்பட்ட பின்னடைவுகள் படிப்படியாக குறைந்து வருவதாகவும்கூறியுள்ளார்.

இதனால் இன்று இரவுக்குள் நாடு முழுவதும் விமான நிலைய சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக தீர்க்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மைக்ரோசாஃ ப்ட் மென்பொருள் பிரச்சினையால் விமான சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது என விமானத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை, மதுரை உட்பட நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் மைக்ரோசாஃ ப்ட் பிரச்சினையால் ஏற்பட்ட பாதிப்பு சீரடைந்து வருவதாக கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!