விருச்சிகம் ராசிக்கு…! சுப காரிய செலவு நிகழும்…! சிந்தனை ஒரு நிலை படுத்தி காரியங்களில் ஈடுபடுங்கள் அதுவே நல்லது…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் ஒரு வித மகிழ்ச்சி இருக்கும்.

இறைவழிபாட்டில் மிகுந்த ஆர்வம் இருக்கும். குழப்பங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டு தான் இருக்கும். குழப்பங்களை சரி செய்ய பொறுமை காக்க வேண்டும். வருமானம் ஓரளவு திருப்தியை கொடுக்கும். தாய் வழி உதவி இருக்கும். வீடு மாற்றம் ஊர் மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். சிந்தனைத் திறன் வெளிப்படும் நாளாக இருக்கும். வாழ்க்கை சுவாரசியமாக சென்றாலும் சில குழப்பம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை இருக்கும். முடிந்த அளவு ஓய்வாக இருக்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நண்பர்களிடம் மன சஞ்சலம் இருக்கும். சுப செலவு நிகழும். எதிர்காலத்திற்கு உண்டான சேமிப்பை சேமிப்பீர்கள். கடன் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லும் பொழுது கவனம் வேண்டும். மன வருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி வரக்கூடும். பெண்கள் எதையும் யோசித்து செயல்படுத்துவது நல்லது. கூடுமானவரை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். காதல் ஒருபோதும் மன வருத்தம் கொடுக்காது விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

மாணவர்கள் தடபுடலாக எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம். கல்வியில் முன்னேறுவதற்கான வெற்றியை தேடுங்கள். மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!