ஆன்மிகம் செய்திகள் ராசி பலன் ஹிந்து விருச்சிகம் ராசிக்கு…! திறமையால் எதிலும் வெற்றி காண முடியும்…! நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரக்கூடும்…!! Rugaiya beevi10 December 2024020 views விருச்சிகம் ராசி அன்பர்களே…! சின்ன சின்ன தடங்கல்கள் கொஞ்சம் இருக்கும். தடங்களை எல்லாம் உடைத்துக் கொண்டுதான் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வாழ்க்கையில் சிறப்பான அனுபவங்களை ஏற்றுக்கொள்வீர்கள். முக்கிய பணிகள் நிறைவேற காலதாமதம் எடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். அடுத்தவர்கள் பார்வையில் பணத்தை செலவழிக்க வேண்டாம். பண வரவு சீராக இருக்கும். மன தைரியம் அதிகரிக்கும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. வழக்கு விவாகரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். உயர் பதவிகளும் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் முன்னேற்றத்தை கொடுக்கும். மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஏற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். புதிய வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றுவீர்கள். பெண்கள் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் செல்ல வேண்டாம்.. வீண் மனக்கவலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். பெண்கள் உயர்வான வாழ்க்கையை கண்டிப்பாக வாழ முடியும். காதலில் பெரிய பிரச்சனை இல்லை சமாளித்து விடுவீர்கள். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். முடிவுகளை எடுக்கும் பொழுது தெளிவு வேண்டும். மாணவர்கள் எதையும் யோசித்தும் சிந்தித்தும் செயல்பட வேண்டும். உயர்கல்வியில் சாதிக்க முடியும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.