ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனை சேர்ந்த ஆடம் பிரிட்டோன் என்பவர் விலங்கியல் நிபுணராக இருந்து வருகிறார். இவர் விலங்குகளை பராமரிக்க முடியாமல் இருக்கும் உரிமையாளரிடமிருந்து அவற்றை வாங்கி பராமரித்து வருகிறார். இவர் தற்போது பாரப்பிலியா என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதாவது இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும் உயிரற்ற பொருட்களின் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆனால் இவருக்கு விலங்குகள் மீது தாக்கம் உள்ளதாக கூறப்படுகிறது .
இவரின் இந்த செயலால் 39 நாய்கள் உயிரிழந்து உள்ளன . அந்த நாய்களை வன்புணர்வு செய்வதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் . அதை பார்த்த நாயின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் . இவர் மீது விலங்குகளை துன்புறுத்துதற்காக 60 குற்றச்சாட்டுகள் உள்ளதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.இதனால் இவருக்கு நீதிமன்றம் 249 வருடங்கள் சில தண்டனை வழங்கியுள்ளது.