மத்திய பிரதேசம் மாநிலம் மந்சவுர் மாவட்டத்தில் சங்கர்லால் என்ற முதியோர் விவசாயம் செய்து வருகிறார். சங்கர்லால் வைத்திருந்த நிலத்தில் பாதி அவருக்கு சொந்தமில்லை என்றும் அதனை அப்போதைய சொந்தக்காரர் ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு விற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின்பு தற்போது தாசில்தார் முன்னிலையில் நடந்த பத்திரப்பதிவுக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி விற்ற உரிமையாளரின் மகன் தற்போது நிலம் முழுவதும் தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடி உள்ளார்.https://twitter.com/i/status/1813502185684021656
இந்த நிலையில் நிலம் தன்னுடையது என்றும் அதில் எனது குடும்பம் பல காலமாக விவசாயம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார் . இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் படி பலமுறை சங்கர்லால் அரசு அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஆனால் இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயி தனது நிலத்தை மாஃபியாக்கள் தன்னிடமிருந்து பறித்து விட்டனர் எனவும் தாசில்தார் செய்த தவறினால் விவசாயி நான் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவும் இந்த அரசாங்கத்தின் மீது குறை கூறி ஆட்சியர் அலுவலக அறையில் கைகளை குவித்தபடி தரையில் புரண்டு உள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.