“விவசாயி மரணத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்கணும்” …. இபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

நாகை மாவட்டத்திலுள்ள திருவாய்மூர் தெற்கு தெரு பகுதியில் வசித்து வந்தவர் தான் விவசாயி ராஜ்குமார். இவர் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி செய்து இருந்தார். இவ்வாறு சாகுபடி செய்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வந்ததால் ராஜ்குமார் கவலையில் இருந்தார். இந்நிலையில் ராஜ்குமார் தன் வயலுக்கு சென்று பார்த்தபோது பயிர்கள் கருகி இருப்பதை கண்டு மனமுடைந்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி கீழே விழுந்து உள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ராஜ்குமாரை மீட்டு திருக்குவளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குறுவை பயிர் கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் மரணத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசின் செயல்பாட்டால் பல விவசாயிகள் மரணிப்பார்களோ என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாக இபிஎஸ் குற்றம் சாட்டினார். மேலும் உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவதுடன், விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி நிவாரணத்தொகை ரூ.35 ஆயிரத்தை உடனே வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!