வீட்டுப்பாடத்தை முடிக்காமல் வந்த சிறுமி…ஆசிரியர் பலமாக அடித்ததில் காதில் இருந்து ரத்தமா…?

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார். இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது.

பள்ளியில் வேலை செய்துவந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் குமார் மீது எந் புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் சக ஆசிரியை பகிர்ந்த இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!