வெளி நாடுகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை உயர்வு….மந்திரி கீர்த்தி வர்தன் சிங்…!!!

பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் வெளிநாடுகளின் தங்கி படிக்கும் இந்தியர்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சக இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிவில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகள் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது என கூறியுள்ளார்.2019 ஆம் ஆண்டில் 6,75,541 மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

தற்போது இந்த எண்ணிக்கை13,35,878 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர் எனவும் கூறியுள்ளார். இதில் கனடாவில்4,27,000 பேரும் அமெரிக்காவில் 3,37,630 பேரும் இங்கிலாந்தில் 1,85,000 பேரும் ஆஸ்திரேலியாவில் 1,22,202 பெரும் படித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் உயரும் என தெரிவித்துள்ளார்.மேலும் விபத்துக்கள் மருத்துவ காரணங்கள் மற்றும் தாக்குதல்களால் 41 நாடுகளின் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளார்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்…! சிரமப்படாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரியாகும்…! கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்…!!