செய்திகள் மாநில செய்திகள் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…. அச்சத்தில் மக்கள்….!!! Sathya Deva18 July 20240116 views கர்நாடகத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது . இதை தொடர்ந்து நேற்று 2,731 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதில் 524 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தின் டெங்கு பாதித்தவரின் எண்ணிக்கை 10,973 ஆக மீண்டும் அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது. இந்த டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. தலைநகர் பெங்களூரில் மட்டும் ஒரு நாளில் 270 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .இந்த பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றன.