பெங்களூரில் உள்ள ஜி. டி மாலில் முதியவர் ஒருவர் படம் பார்க்க வந்துள்ளார். அப்போது அவரிடம் வேட்டி அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை பேண்ட் மாற்றிக்கொண்டு வந்தால் உள்ளே போகலாம் இது இந்த மாலின் கொள்கை என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். அந்த முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்கள் இருந்தும் அவரை உள்ளே விடவில்லை என கூறப்படுகிறது. . https://twitter.com/sharanpoovanna/status/1813478010663879006?
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது . இதை பார்த்த இணையதள பயனர்கள் இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டியை உள்ளே அனுமதிக்காததை குறித்து நிர்வாகத்தை பற்றி கோபமாக பேசி வருகின்றனர். இந்த செயல் கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் பரவி வருகிறது. இந்த வீடியோ பரவலானதை தொடர்ந்து நிர்வாகம் முதியவருக்கு சால்வை அணிவித்து மன்னிப்பு கேட்டு அவரை சமாதானம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.