செய்திகள் மாநில செய்திகள் வேட்டி அணிந்த முதியோரை அனுமதிக்காத சர்ச்சையால்……ஜி .டி மால் சீல் வைப்பு…!!! Sathya Deva19 July 2024075 views பெங்களூரில் உள்ள ஜி.டி ஷாப்பிங் மாலுக்கு முதியவர் வேட்டி கட்டி வந்துள்ளார் . அவரை பேன்ட் மாற்றிக் கொண்டு வந்தால் அனுமதிக்கிறோம் இல்லை என்றால் மாலுக்குள் நுழைய அனுமதி இல்லை. இது இந்த மாலின் கொள்கை என்று தெரிவித்துள்ளனர். அந்த முதியவரிடம் ஃப்ரீ புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்களும் இருந்தது. இது தொடர்பான சம்பவம் சர்ச்சையான நிலையில் ஜி.டி ஷாப்பிங் மாலுக்கு ஏழு நாட்களுக்கு மூடி சீல் வைக்க கர்நாடக அரசு ஜூலை 18 நேற்று உத்தரவிட்டுள்ளது. விவசாயிக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையை வன்மையாக கண்டிப்பதாகவும் ,தனிமனித கண்ணியத்திற்கும் சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு இன்றைக்கும் பொறுத்துக் கொள்ளாது எனவும் கூறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அந்த மாநில அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளன என கூறப்படுகிறது .