சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் சினிமா வேற லெவல்! “கோட்” திரைப்படம் இதுவரை செய்த மொத்த கலெக்ஷன்…இத்தனை கோடியா…? Sowmiya Balu20 September 2024066 views இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கோட்”. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் செப் 5ம் தேதி வெளியானது. இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், கோட் திரைப்படம் வெளியாகி 15 நாட்களை கடந்த நிலையில் உலகளவில் இதுவரை செய்த மொத்த வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 418 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.