Home சினிமா செய்திகள் வேற லெவல்! சுதந்திர தினத்தை முன்னிட்டு சூப்பரான போஸ்டர் வெளியிட்ட “அந்தகன்” படக்குழு… இணையத்தில் வைரல்…!!!

வேற லெவல்! சுதந்திர தினத்தை முன்னிட்டு சூப்பரான போஸ்டர் வெளியிட்ட “அந்தகன்” படக்குழு… இணையத்தில் வைரல்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”அந்தகன்”. இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி வரவேற்பு பெற்ற அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி, கே. எஸ். ரவிக்குமார், மனோபாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சென்ற வாரம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தகன் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.