சினிமா செய்திகள் தமிழ் சினிமா வேற லெவல்! “தங்கலான்” படத்தின் முதல் நாள் வசூல்… படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!! Sowmiya Balu16 August 2024076 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் முதல் நாளில் மட்டும் 26.44 கோடிகள் வசூல் செய்துள்ளதாக நடிகர் விக்ரம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.