102
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே 500 கோடி வியாபாரம் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழைத் தொடர்ந்து விரைவில் இந்தி படங்களிலும் இவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இவர் ரத்த தானம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு 400 கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.