சினிமா செய்திகள் தமிழ் சினிமா வேற லெவல்! ரிலீசுக்கு முன்பே பட்டைய கிளப்பும் “ராயன்”…. இதுவரை செய்த மொத்த வசூல்…!!! Sowmiya Balu23 July 20240113 views நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். தற்போது இவர் தனது ஐம்பதாவது படமான ”ராயன்” படத்தை இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், எஸ். ஜே. சூர்யா, நித்யா மேனன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இந்த படம் ரிலீசுக்கு முன்பே உலகளவில் 1.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சூப்பரான தகவல் வெளியாகயுள்ளது. மேலும், இந்த படம் முதல் நாள் வசூலில் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது