வேற லெவல்! ரெக்கார்டுகளை முறியடித்து டிரெண்டிங்கில் “மகாராஜா”… பாராட்டும் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திரைப்படம் மகாராஜா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது.

இந்நிலையில், 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 12ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த திரைப்படம் வெளியானது. இந்த படம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நெட்பிளிக்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என மகாராஜா பெருமையை பெற்றுள்ளது.

\மேலும், உலகம் முழுவதும் சுமார் 18.6 மில்லியன் பேர் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளனர். இந்த படம் ரிலீசாகி ஆறு வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதில் டாப் 10 வரிசையில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?