சினிமா செய்திகள் தமிழ் சினிமா வேற லெவல்! விஜய் சேதுபதி நடிக்கும் “ட்ரெயின்”… லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் ரிலீஸ்…!!! Sowmiya Balu23 August 2024039 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மிஷ்கின் இயக்கத்தில் தயாரிப்பாளர் தானு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டிரெயின்’. இந்த படத்தில் நாசர், டிம்பிள் ஹயாதி, ஜெயராம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக சென்னையில் ட்ரெயின் அரங்கம் அமைத்து எடுக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு மிஷ்கினே இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.