தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நதியா. இவர் இதற்கு முன் சில மலையாள படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அன்புள்ள அப்பா, சின்ன தம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் 1988 ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது