உலக செய்திகள் செய்திகள் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு… பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு…!!! Sathya Deva29 August 2024078 views பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் கொள்ள பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சாரா பாலோக் தெரிவித்துள்ளார். “இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதை டில நாடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டன. எந்தெந்த நாடுகள் கலந்து கொள்கின்றன என்பது பற்றிய தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.