உலக செய்திகள் செய்திகள் ஸ்விசர்லாந்தில் இந்த இயந்திரமா ?தனி மனித உரிமை என கூறிய அரசு…!! Sathya Deva20 July 20240130 views ஸ்விசர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணை கொலை செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இது தனி மனித உரிமையாக அரசு கருதுகிறது. இதற்காக சுவிட்சர்லாந்தில் தற்கொலை பாட் களை விரைவில் அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளது .சார்கோ கேப்சியூல் என்று அழைக்கப்படும் இந்த பாட் 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை ‘லாஸ்ட் ரிப்போர்ட்’ அமைப்பு வரவேற்றுள்ளது. அதாவது இந்த வகையில் மரணிக்க விரும்புவோர் தங்களின் மனநிலையை சோதிக்க உளவியல் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கேப்சியூல் உள்ளே படுத்துக் கொண்டு கதவை மூட வேண்டும் உள்ளே உள்ள ஆட்டோமேட்டிக் இயந்திரக் குரல் நீங்கள் யார் ?எங்கு இருக்கிறீர்கள்? பட்டனை அழுத்த உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? என்ற கேள்விகளை கேட்கும். இதற்கு பதில் அளித்தவுடன் பட்டனை அழுத்தினால் காற்றில் உள்ள வாய்வு குறைந்து விடும் என கூறப்படுகிறது .பின்பு உள்ளே உள்ள நபர் மயக்கநிலையில் இருப்பார். ஐந்து நிமிடங்கள் கழித்து மரணம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டனை அழுத்திய பிறகு தங்களது முடிவை யாராலும் மாற்றிக் கொள்ள முடியாது என குறிப்ப்பிடப்படுகிறது .