உலக செய்திகள் செய்திகள் ஹைதி நாட்டில் படகு தீப்பிடித்தது…40 அகதிகள் பலி…!!! Sathya Deva22 July 20240115 views ஹைதி நாட்டில் இருந்த அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவை நோக்கி 80 பேர் படையில் புறப்பட்டனர். அவர்கள் வடக்கு ஹைதியில் சென்று கொண்டிருக்கும்போது படகு தீ பிடித்ததில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர் என கூறப்படுகிறது. இந்த படகில் பயணித்த மீதமுள்ள 40 பேரை ஹைதியின் கட லோர காவல் படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட அகதிகளுக்கு மருத்துவ பராமரிப்பு, உணவு, தண்ணீர் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதில் 11 அகதிகள் தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக சர்வதேச அகதிகள் அமைப்பு தலைவர் புலம் பெறுவதற்கான சட்டபூர்வ வழிகள் இல்லாதது தான் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு 80,000 மேற்பட்ட அகதிகள் அண்டை நாடுகளால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.