உலக செய்திகள் செய்திகள் 10 மணி நேரம் சவால்… எதிர் கொண்ட யூ டியூப் பிரபலம்…பலியான அவலம்…!!! Sathya Deva23 July 2024099 views சீனாவை சேர்ந்த பான் சியாட்டிங் என்ற பெண் youtube பிரபலமாக இருந்து வருகிறார். இவருக்கு வயது 24 என்று கூறப்படுகிறது. இவ தன் சாப்பிடும் வகை வகையான உணவுப் பொருட்களை யூ டியூபில் வீடியோவாக வெளியிடுவார். இவர் பல முறை உணவை சாப்பிடும் சவால்களை செய்து பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் பான் சியோட்டிங் தொடர்ந்து பத்து மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர் கொண்டார். அவர்களது பெற்றோர் மற்றும் நல விரும்பிகள் எச்சரித்த போதிலும் அவர் உணவு உண்ணும் சவாலை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார். அப்போது ஜூலை 14ஆம் தேதி அன்று அவர் மூச்சு திணறி இறந்தார் என கூறப்படுகிறது . மருத்துவர்கள் அவரின் உடலை சோதனை செய்த அறிக்கையில் அவர் வயிறு சிதைந்து விட்டதாகவும், செறிக்க படாத உணவுகள் இருந்ததாகவும் கூறினார். இந்த மரணம் சமூக ஊடகங்களின் கவலையை ஏற்படுத்தியது.