சினிமா செய்திகள் செய்திகள் 10 வருடங்கள் இடைவேளை…. விரைவில் வெளியாக இருக்கும் படம்…. படகுழு தகவல் வெளியீடு….!! Gayathri Poomani26 June 20240143 views 2013-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தேசிங்கு ராஜா. இதை பூவெல்லாம் உன் வாசம் மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எழில் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் விமல் நடிகனாக நடித்து இருந்த நிலையில் ஜோடியாக நடிகை பிந்து மாதவி நடித்துள்ளார். இந்த படம் காமெடி திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து 10 வருடங்களுக்கு பின் தேசிங்கு ராஜா திரைப்படத்தின் 2-வது பாகம் வெளியாகி இருக்கின்றன. இதில் முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர் விமல் இப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். பின்னர் இத்திரைப்படத்தில் 2-வது முக்கியமான கதாபாத்திரத்தில் ஜனா நடத்து வருகிறார். மேலும் ,தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்ற ஹர்ஷிதா மற்றும் ராம் சரண் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய ரங்கஸ்தலம் திரைப்படத்தில் நடித்திருந்த பூஜிதா பொன்னாடா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து இருகின்றனர். இதில் மொட்டை ராஜேந்திரன், மதுரை முத்து, மதுமிதா, ரவி மரியா, சிங்கம்புலி, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்லி மற்றும் புகழ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பாக பி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இதில் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்திற்கு பின் இயக்குனர் எழிலுடன் இணைந்து பாடகர் வித்யாசாகர் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தேசிங்கு ராஜா 2-வது பாகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருப்பதாக திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படம் கல்லூரியில் படிக்கும் நான்கு தோழர்களின் கதையை மையமாகக் கொண்டு காமெடி கலந்து இருக்கும் இப்படத்தை கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.