செய்திகள் தென்காசி மாவட்ட செய்திகள் கோழி தீவனங்களுக்கு நடுவே இருந்த அரிசி… 12 டன் பறிமுதல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish17 July 20240105 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனைகள் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதி வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அப்பகுதி வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் இருந்த கோழி தீவனங்களுக்கு நடுவே நூற்றுக்கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த அசோக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் லாரியில் இருந்த 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் லாரியின் உரிமையாளர் மற்றும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.