அரியலூர் மாவட்ட செய்திகள் “1200 வருடங்கள் பழமை வாய்ந்த சிலை பறிமுதல்”… கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!! dailytamilvision.com17 April 20240111 views அரியலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே செங்குணம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கணேஷ் ராஜா (54) மற்றும் ராமகிருஷ்ணன் என்பவர்கள் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் இவர்கள் பழமை வாய்ந்த சிலைகளை கடத்தியுள்ளதாக திருச்சி சிலை கடத்தல் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கணேஷ் ராஜா வீட்டிலிருந்து 3 அடி உயரமுள்ள சிலை மீட்கப்பட்டுள்ளது. இந்த சிலை 1200 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். அதோடு ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கணேஷ் ராஜா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.