செய்திகள் மாநில செய்திகள் பெருந்தலைவரின் 122-வது பிறந்தநாள் விழா…!! அரசு உதவி பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கம்…!! Revathy Anish16 July 20240117 views தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூலை 15-ஆம் தேதி கர்ம வீரர், பெருந்தலைவர் என அனைவராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் அவரது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி பகுதியில் உள்ள புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் உள்ள காமராஜர் உருவ படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் அரசு உதவி பெரும் 3,995 பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை நடைமுறை படுத்தியுள்ளார். மேலும் சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் அருகே அமைந்துள்ள தலைவர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மேயர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் என பங்கேற்று மரியாதை செலுத்தியுள்ளனர்.