பெருந்தலைவரின் 122-வது பிறந்தநாள் விழா…!! முதல்வர் வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூலை 15-ஆம் தேதி கர்ம வீரர், பெருந்தலைவர் என அனைவராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் அவரது பிறந்த நாள் நாளை தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் அருகே அமைந்துள்ள தலைவர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

அதே போல் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி பகுதியில் உள்ள புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் உள்ள காமராஜர் உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் மேயர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!