சோதனையில் சிக்கிய 124 கிலோ கஞ்சா… ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது… போலீசார் நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே உள்ள திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக பதிவெண் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 வாலிபர்களை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து சிறிது தூரம் சென்று இருசக்கர வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அப்பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் பாதரக்குடி அய்யனார் கோவில் அருகே உள்ள பாலத்தின் அடியில் சுமார் 124 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து திருச்சி மற்றும் புதுக்கோட்டை சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் திருச்சி சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் நடத்திய சோதனையில் ஆந்திர பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த விசாகபட்டினத்தை சேர்ந்த வித்யாசாகர், விஜயவாடாவை சேர்ந்த சுபாஷ், துர்கா ராவ், சந்திபாபு, அபிலேஷ் வர்மா ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்கள், 3 கார்கள், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களில் வித்யாசாகர் என்பவருடைய தந்தை ஆந்திராவில் தலைமை காவல்துறை அதிகாரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!