13 ஆண்டுகளுக்கு பிறகு…. விமர்சையாக நடந்த மாரியம்மன் கோவில் தேரோட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு சாமி வீதி உலா, பால்குடம் எடுத்தல், காளியம்மன் வேடமடைந்து நடனம், பொங்கல் வைத்தல், கழுமரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு தயிர், பால், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் நாளை நிலையை வந்தடையும். சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழா நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

மாணவிக்கு பாலியல் தொல்லை… வெளியான திடுக்கிடும் உண்மை… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!!

செப்.5… வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள்… அதிமுக சார்பில் மரியாதை…!!