தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மேற்கு பகுதியில் உள்ள ஓல்டு இந்திரா நகரில் செயல்பட்டு வரும் பிரபு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரை தரத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதை பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோக்கள் அடுத்தடுத்து இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
இந்த உயிரிழப்பு ஏற்பட்டதால் சக மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர் .போலீசார் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாத நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு இடையே இந்த விவகாரத்தில் மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டனர். மேலும் கட்டிட அடித்தளங்களின் நூலகம் அமைக்க கூடாது என்ற விதியிலிருந்து சட்ட விரோதமாக அங்கு நூலகம் இயங்கி வந்துள்ளது. மேலும் டெல்லியில் கரைத்தளத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு வந்த 13 கோச்சிங் சென்டரை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.