செய்திகள் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் மேலும் 13 மீனவர்கள் கைது… 25-ஆம் தேதிவரை காவல்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!! Revathy Anish12 July 2024078 views புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினத்தை சேர்ந்த செல்வகுமார், மணிகண்டன், கலந்தர் நைனா முகமது ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் அப்பகுதியை சேர்ந்த 13 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 13 மீனவர்களையும் வருகின்ற 25-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.