சான்றிதழ் வழங்க 1,500 ரூபாய்… சிக்கிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி… சிறையில் அடைப்பு…!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோவிந்தர் நகரில் குருசாமி என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு உணவு பாதுகாப்பு சான்று பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்த சான்று வழங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் 1,500 ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.

இதனை அறிந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சந்திரசேகரனை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில் போலீசார் அவரை விருதுநகர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்…! சிரமப்படாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரியாகும்…! கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்…!!