16 வயது சிறுமி கர்ப்பம்… கணவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு… போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலையில் மாவட்டம் வந்தவாசி பகுதியில் 16ஆம் வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஜானகிராமன்(32) என்பவர் மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அருங்குணம் பகுதியில் வைத்து சிறுமிக்கும், ஜானகிராமனுக்கும் திருமணம் செய்து வைத்தனர். தற்போது சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த வந்தவாசி மகளிர் காவல்துறையினர் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மாணவிக்கு 18 வயது நிரம்பாததை உறுதி செய்த போலீசார் சிறுமியை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாகிய ஜானகிராமன், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த மாணவியின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 பேரும் தலைமறைவான நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!