செய்திகள் திருப்பூர் மாவட்ட செய்திகள் நண்பர்கள் போல நடித்து… ஏமாற்றிய 2 தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish16 July 2024081 views திருப்பூர் பல்லடம் குண்டாபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல்-சுருதி தம்பதியினர் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களும் பல்லடத்தில் வசித்து வரும் ஆந்திராவை சேர்ந்த ரவி-துர்கா தம்பதியினரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரவி மற்றும் துர்கா, சுருதியிடம் சென்று எனக்கு தெரிந்த ஒரு நபரிடம் ஒரு கிலோ தங்க கட்டி இருப்பதாகவும், அதனை எப்படி விற்பனை செய்வதென்று தெரியாமல் வைத்திருப்பதாக கூறினார். இதனை அறிந்த சுருதி அந்த தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம் பார்க்கலாம் என ஆசைப்பட்டு தான் வாங்கி கொள்வதாக கூறியுள்ளார். இதனை ரவி மற்றும் துர்கா அதே பகுதியில் வசித்து வரும் மற்றொரு ஆந்திர தம்பதியான முனுசாமி-குமாரி வீட்டிற்கு அழைத்து சென்று தங்ககட்டிகள் எனக் கூறி இரண்டு கட்டிகளை சக்திவேல்-சுருதியிடம் 13லட்சத்திற்கு விற்பனை செய்தனர். இதனையடுத்து அவர்கல் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அந்த தங்க கட்டிகள் தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளைகள் என தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேல் உடனடியாக முனுசாமி வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இது குறித்து சக்திவேல் பல்லடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் ரவி-துர்கா, முனுசாமி-குமாரி ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த 2 தம்பதியினரும் இதுபோல் பலரிடம் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணம் பறித்தது தெரியவந்தது. எனவே அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.