வாரத்திற்கு 2 நாள்… தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம்… புதிய ரயில் சேவை…!!

தொழில் நகரமாக மாறி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல ரயில் சேவை வேண்டும் என வர்த்தக சங்கத்தினர், ரயில் பயணங்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம்-தூத்துக்குடிக்கு ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த நிலையில் அது நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள், வர்த்தக தொழில் சங்கங்கள், நல சங்கம், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ரயில் சேவையை விரைவில் இயக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அதற்கு பலனாக இன்றிலிருந்து தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் சேவையை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல். முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் இந்த ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மேட்டுப்பாளையம் சென்றடையும். அதே போல் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7:35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலையில் தூத்துக்குடிக்கு வந்து சேரும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டச்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!