கரூர் செய்திகள் மாவட்ட செய்திகள் 2 நாட்கள் காவல்… எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் விசாரணை… நீதிமன்றம் அளித்த அனுமதி…!! Revathy Anish23 July 20240124 views 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தின் மனு அளித்தனர். இந்த மனுவை விசாரித்த கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிபதி பரத்குமார் எம்.ஆர். விஜயபாஸ்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் கரூர் மாவட்டம் காந்தி கிராமம் சின்னப்பா நகரில் உள்ள அலுவலகத்திற்கு விஜயபாஸ்கரை பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.