செய்திகள் மாநில செய்திகள் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 2 பேர்… கட்சி பொறுப்பில் இருந்து உடனடி நீக்கம்… வெளியான தகவல்…!! Revathy Anish18 July 20240113 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு அளிக்கப்பட்ட பண பரிவர்த்தனங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பெண் வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான மலர்கொடி திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க இணை செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் இயக்க மாநில மாணவர் அணி துணை தலைவர் பதவியில் ஹரிஹரன் இருந்து வந்தார். ஏற்கனவே பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது தமாகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.