செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் 2 பேர் கொடூர கொலை… போலீசில் சரணடைந்த கொலையாளி… முசிறி அருகே பரபரப்பு…!! Revathy Anish8 July 2024057 views திருச்சி மாவட்டம் முசிறி வாழவந்தி பகுதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கணவனை பிரிந்து தனியாக வசித்து வரும் கீதா(46) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று பாலசந்திரன் வழக்கம்போல கீதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பாலசந்திரன் அரிவாளை எடுத்து கீதாவை வெட்டி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவர் அதே ஆத்திரத்தில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர் ரமேஷ் என்பவரையும் டீக்கடை அருகே வைத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த தாக்குதல் பலத்த காயமடைந்த ரமேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கிடையே பாலசந்திரன் ஜம்புநாதன் காவல்நிலையத்தில் தாமாக சரணடைந்துள்ளார். மேலும் 2 கொலைக்கும் வெவ்வேறு காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பாலசந்திரனுக்கும் ரமேஷுக்கு இடையே ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததால் அவரை கொலை செய்தேன் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கீதாவை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.