கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் மது அருந்தி 2 பேர் மயக்கம்… கள்ளச்சாராயம் என பரவிய வதந்தி… போலீசார் விசாரணை…!! Revathy Anish29 June 2024071 views கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மஞ்சநாயக்கனூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகளான ரவி மற்றும் மகேந்திரன் மது வாங்கி அருந்தியுள்ளனர். மது குடித்த சில நேரத்திலேயே இருவரும் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் என வதந்தி பரவியது. தகவலறிந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் மகேந்திரன், ரவி குடித்து கள்ளச்சாராயம் இல்லை என உறுதியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.