செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு சுடுகாட்டு பகுதியில் 2 பேர் தலை அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வந்த தமிழரசன், அண்ணாமலை என தெரியவந்தது. மேலும் அவர்களை கொலை செய்தவர்கள் யார் எனவும், எதற்காக கொலை செய்தார்கள் எனவும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.