செய்திகள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் 20-ஆம் ஆண்டு நினைவு தினம்… கும்பகோணம் தீ விபத்து… பெற்றோர்கள் அஞ்சலி…!! Revathy Anish16 July 2024079 views தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி அந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 94 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வருடந்தோறும் இந்த நாளை உயிரிழந்த குழந்தைகளின் நினைவு தினமாக பள்ளியில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை 16 இன்று பள்ளியின் முன்பு நினைவஞ்சலி கூட்டமும், கும்பகோணம் பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர் வளையம் வைத்து பலியான குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அப்பகுதியில் உள்ள மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றினர்.