செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தினால் 20% தள்ளுபடி… இந்த மாதத்தில் மொத்தம் 84,33,837 பேர் பயணம்… மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு…!! Revathy Anish2 July 20240108 views சென்னை மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பயணிகளுக்கு எளிய போக்குவரத்து வசதி, பாதுகாப்பு போன்றவைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் உறுதி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் மெட்ரோவில் சுமார் 84,33,837 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் பயணசீட்டை எளிதாக அவர்கள் விரும்பும்படி எடுத்து கொள்ளும் வசதியையும் மெட்ரோ நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. எனவே பயணிகள் QR குறியீடு, Paytm, PhonePe மற்றும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தியும் பயணசீட்டு எடுத்து கொள்ளலாம். இதற்கு மெட்ரோ நிறுவனம் 20% தள்ளுபடி வழங்குகிறது.