சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்ணீருடன் பிரியாவிடை பெற்றார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.
இதில் 114 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு அணி வீரர்களும் பிரியாவிடை கொடுத்தனர். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.