உலக செய்திகள் செய்திகள் ட்ரெண்டிங் 22 ஆவது உச்சி மாநாடு…. ரஷ்யா சென்ற பிரதமர் மோடி…!! Inza Dev9 July 2024088 views ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று இந்திய- ரஷ்ய இடையிலான 22 ஆவது வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் நேற்று ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு ரஷ்யாவின் துணை பிரதமர் டென்னிஸ் மாந்த்ரோ மோடி அவர்களை ரஷ்ய படையின் அணிவகுப்பு மூலமாக சிறப்பாக வரவேற்றார். பின்பு மாஸ்கோவில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அழைத்து சென்று ரஷ்ய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று மோடி அவர்களை பேட்டரி காரில் அமர வைத்து தனது மாளிகையையும் புதின் அவர்கள் சுற்றி காண்பித்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.