தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கும் முக்கிய துறையாக பத்திரப்பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது. பத்திரப்பதிவுத்துறையில் ஆவணங்களை பதிவு செய்வதற்காக இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்காக தினமும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100 முன் ஆவண பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுமக்கள் சிரமமின்றி ஆவண பதிவுகளை மேற்கொள்ள கடந்த 12ஆம் தேதி முன்பதிவு வில்லைகள் 100-ரிலிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் 12-ஆம் தேதி முகூர்த்த தினம் என்பதால் தமிழகம் முழுவதிலும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் சுமார் 20 ஆயிரத்து 310 ஆவண முன்பதிவு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதன் பதிவு கட்டணமாக அரசுக்கு ஒரே நாளில் 224.26 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் பத்திரப்பதிவு துறையில் இதுவே ஒரு நாளின் அதிகபட்ச வருவாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.